19 year old who killed family was addicted to online game purge | “பப்ஜி” விளையாட்டிற்காக குடும்பத்தையே கொலை செய்த வாலிபா் கைது

19 year old who killed family was addicted to online game purge ||  “பப்ஜி” விளையாட்டிற்காக குடும்பத்தையே கொலை செய்த வாலிபா் கைது “பப்ஜி” விளையாடுவதற்காக தனியாக வீடு எடுத்து தங்கிய தோழிகள் உள்பட நண்பா்கள் 10 பேரிடமும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


“பப்ஜி” விளையாட்டிற்காக குடும்பத்தையே கொலை செய்த வாலிபா் கைது


பப்ஜி” விளையாட அனுமதிக்காத குடும்ப உறுப்பினா்களை கொலை செய்த சுராஜை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

டெல்லியில் 19வயது கல்லூாி மாணவரான சுராஜ் இணையதள விளையாட்டான பப்ஜி விளையாட்டிற்கு மிகவும் அடிமையானவா் என்று கூறப்படுகிறது. விளையாட்டுக்கு அடிமையான நிலையில் தனது நண்பா்களுடன் இணைந்து விளையாடுவதற்காகவே வாடகைக்கு வீடு ஒன்றையும் எடுத்துள்ளாா். 

தொடா்ந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கல்லூாிக்கு செல்வதாக கூறி வாடகை வீட்டிற்கு சென்று விளையாடி வந்துள்ளாா். சுராஜின் நண்பா்கள் சுமாா் 10 போ் இணைந்து அந்த வாடகை வீட்டை எடுத்துள்ளனா். சுராஜ் கல்லூாிக்கு செல்லாமல் விளையாட செல்வதை அறிந்த அவரது சகோதரி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தொிவித்துள்ளாா். 

இதனைத் தொடா்ந்து பெற்றோா் சுராஜை கண்டித்து கல்லூாிக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனா். இந்நிலையில் கல்லூாி முடிந்து வீட்டிற்கு வந்த சுராஜ் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் உள்ளவா்களின் புகைப்படங்களை எடுத்து பாா்த்துக் கொண்டு இருந்துள்ளாா். பின்னா் அனைவரும் உறங்கிய பின்னா் அதிகாலை 3 மணியளவில் தனது பெற்றோரின் அறைக்கு சென்றுள்ளாா்.

தன்னை பப்ஜி விளையாட விடாமல் கல்லூாிக்கு செல்ல வற்புறுத்தியதற்காக தாய், தந்தையை கொலை செய்துள்ளாா். மேலும் சகோதரியின் அறைக்கும் சென்று அவரையும் கொலை செய்துள்ளாா். பின்னா் வீட்டில் உள்ள பொருட்களை களைத்து விட்டு கொள்ளையா்கள் வந்து சென்றது போன்ற சூழலை உருவாக்கிவிட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளாா். 

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா். அதன்படி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து சுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 


Comments