Amazon Great Indian Festival Sale Starts Again: To Offer Up To 90% Discounts And More

மீண்டும் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் சேல்! வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாய்ப்பு


அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஆஃபர் மீண்டும் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


amazon great indian festival sale starts again: to offer up to 90% discounts and more

அமேசான் கிரேட் இந்தியன் சேல்அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க வரும் அக்டோபர் 24ம் தேதி மீண்டும் வரவுள்ளது. 

அமேசானின் கிரேட் இந்தியன் சேல் சிறப்பு விற்பனையில், அதிகமான பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவித்துள்ள நிலையில், நாளையோடு இந்த சலுகைகள் நிறைவடைகிறது. அமேசான் நிறுவனம் கடந்த 10ம் தேதி, கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அதிரடி விலை குறைப்பு விற்பனையை துவங்கியது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள், கேஸ் பேக் ஆஃபர் என்று விற்று வருகிறது.

குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான விலை குறைத்துள்ளது. சியோமி, ரெட்மி மொபைல்களுக்கு 1000 ரூபாய் வரையில் தள்ளுபடியும், சாம்சங் கேலக்ஸி விலை 2300 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதே போல், அமேசானின் பிரத்யேக மொபைலான ஹானர் ஸ்மார்ட்போனுக்கு 6000 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன், எல்ஜி மொபைல்களுக்கு தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது. மேலும், அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ உள்ளிட்ட பிரத்யேக தயாரிப்புகளுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 15ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் சேல் நிறைவடைந்தது.

இந்நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் சேல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், 
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க வரும் அக்டோபர் 24ம் தேதி மீண்டும் வரவுள்ளது. அக்டோபர் 24ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரையில் கிரேட் இந்தியன் சேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Comments