Apple Iphone Xr Up For Pre-Order On Paytm Mall With 7,000 Exchange Bonus

ஆப்பிள் ஐபோன் XR முன்பதிவு துவக்கம் !


ஆப்பிள் ஐபோன் XR மாடல் போன்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி உள்ளது.


apple iphone xr up for pre-order on paytm mall with 7,000 exchange bonus
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மாடல் போன்கள் கடந்த மாதம்அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. 

புதிய ஐபோன் மாடல்கள் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வர உள்ளது.இந்தியாவில் புதிய ஐபோன் XR64 ஜி.பி மாடல் ரூ.76,900க்கும், 128 ஜிபி மாடல் ரூ.81,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 256 ஜிபி விலை ரூ.91,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஐபோன் XR மாடல்கள் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த தளத்தில் முன்பதிவு செய்வோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்குமாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இதுபோன்று ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்குசெலுத்தலாம்.இத்துடன் ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா, மற்றும் மூன்று மாதங்களுக்குநெட் ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாகவழங்கப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றிவழங்கப்படுகிறது. 

இத்துடன் பேடிஎம் மால் தளத்தில் முன்பதிவு செய்து ரூ.7,000க்குஎக்ஸேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் XR விற்பனை விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments