Bsnl Cautious In Partnering With Zte To Set Up 5g Network

5G நெட்வொர்க் அமைக்க பிஎஸ்என்எல் புதிய திட்டம்


5G சேவையை அமல்படுத்துவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறும் நிலையில், இது பற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.


bsnl cautious in partnering with zte to set up 5g network

Highlights

  • 5G சேவையைக் கொண்டுவருவதில் பிஎஸ்என்எல் மிகவும் எச்சரிக்கையுடன் முடிவு எடுக்கும் - அனுபம் ஸ்ரீவஸ்தவா
  • கடந்த 2012ஆம் பிஎஸ்என்எல் நிறுவனம் 2G நெர்ட்வொர்க் அமைப்பதற்காக ZTE நிறுவனத்துடன்தான் கைகோர்த்தது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ZTE நிறுவனத்துடன் இணைந்து 5G நெட்வொர்க் அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளது. 

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 5G நெட்வொர்க் உருவாக்கத்திற்காக சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ZTE என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது. 

5G சேவையை அமல்படுத்துவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறும் நிலையில், இது பற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார். 

“5G சேவையைக் கொண்டுவருவதில் பிஎஸ்என்எல் மிகவும் எச்சரிக்கையுடன் முடிவு எடுக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடு இருக்கும் என்றால், கண்டிப்பாக இந்த முயற்சியைத் தொடரமாட்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“அபாயம் ஏதும் இல்லாதபோது புதிய தொழில்நுட்பத்தை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ZTE நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தகவல் பெற முயன்றபோது அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. 

கடந்த 2012ஆம் பிஎஸ்என்எல் நிறுவனம் 2G நெர்ட்வொர்க் அமைப்பதற்காக ZTE நிறுவனத்துடன்தான் கைகோர்த்தது.


Comments