Diwali With Mi This Is How You Can Buy Redmi Note 5 Pro At Rupee 1 On Second Day

தீபாவளி சேல்: 1 ரூபாய்க்கு செல்போன் வழங்கும் ஜியோமி நிறுவனம்


தீபாவளியை முன்னிட்டு ஜியோமி நிறுவனம் ரூபாய் ஒன்றுக்கு செல்போன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

diwali with mi this is how you can buy redmi note 5 pro at rupee 1 on second day
எம்.ஐ.யுடன் தீபாவளிஎன்ற பெயரில் ஜியோமிநிறுவனம் பல்வேறு சலுகைகளில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

தீபாவளியை முன்னிட்டு இணையதள வணிக நிறுவனங்கள் பலவும் போட்டிப்போட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. மக்களை கவரும் வண்ணம் அடுக்கடுக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டு அதன்படி விற்பனை நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஜியோமி நிறுவனம் எம்.ஐ.யுடன் தீபாவளி (Diwali With MI) என்ற பெயரில் தங்கள் நிறுவன பொருட்களை சலுகையில் விற்பனை செய்து வருகிறது. அதன்படி இன்று (24ம் தேதி) மாலை 4 மணிக்கு சிறப்பு சலுகை ஒன்றை அந்நிறுவனம் அறிவித்தது. அதன்படி மாலை 4 மணிக்கு தொடங்கி நாளை (25ம் தேதி) வரை ரெட்மி நோட் 5 கோல்ட் செல்போன் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை ரூபாய் ஒன்றுக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. 

பொருட்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தொிவித்துள்ளது. மேலும் ஜியோமி நிறுவனப் பொருட்களை வாங்கும் நபா்களுக்கு கேஷ் பேக், கூப்பன் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தொிவித்துள்ளது.

Comments