Facebook Removed 8.7m Child Abuse Images Using Ai-Based Tool

Facebook :87 லட்சம் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை நீக்கிய பேஸ்புக்



செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன்படுத்தி பேஸ்புக் 87 லட்சம் குழந்தைகளின் ஆபாச படங்களை நீக்கியுள்ளது.


facebook removed 8.7m child abuse images using ai-based tool
பேஸ்புக் நிறுவனம் அடுத்தடுத்து பல விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், அதில் இருக்கும் 87 லட்சம் குழந்தைகளின் ஆபாச படங்களை நீக்கியுள்ளது. 

உலகின் மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக். எந்தளவுக்கு புகழின் உச்சியில் இருந்ததோ, தற்போது வேகமாக அதன் மேல் இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியுள்ளது. 

பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதோடு, ஐரோப்பிய நாட்டில் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடியதாக அந்த நிறுவனத்திற்கு 5 லட்சம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

87 லட்சம் ஆபாச படங்கள் :பேஸ்புக் பக்கத்தில் பல லட்சம் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதை நீக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன்படுத்தி பேஸ்புக் கணக்கில் இருக்கும் குழந்தைகளின் ஆபாச படங்களை நீக்கியுள்ளது. 

மேலும் அந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள பயனரின் கணக்கில் நடக்கும் கலந்துரையாடல், செயல்பாட்டை கவனித்து வருகின்றது. இதன் மூலம் குழந்தைகள் தகாத செயல்பாடுகளில் ஈடுபட யாரேனும் முயற்சி செய்கின்றனரா எனவும் கண்காணித்து வருகின்றது. என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Comments