Fans Create Monalisa Art Inspired By Jaanu In 96 Movie

ஜானுவாக மாறிய மோனாலிசா ஓவியம்


உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இத்தாலியைச் சேர்ந்த லியொனார்டோ டா வின்சி 16ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் வரைந்ததாகும்.

ஜானுவாக மாறிய மோனாலிசா ஓவியம்
மோனாலிசாவை 96 படத்தில் த்ரிஷா போல மாற்றி ரசித்துள்ளனர் 96 படத்தின் ரசிகர்கள். 

நீண்ட நாட்களுக்குப் பின் த்ரிஷா நடித்து வெளிவந்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது. இப்படத்தின் வெற்றி மூலம் ரஜினி நடிக்கும் பேட்ட படத்திலும் வாய்ப்பு அமைந்துள்ளது. 

இந்தப் படத்தில் த்ரிஷாவின் ஜானு என்ற பாத்திரமும் விஜய் சேதுபதியின் ராமு பாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டன. இதனைக் கொண்டாடும் வகையில் ஜானு மற்றும் ராமு பொம்பைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனையும் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் நெட்டிசன்கள் த்ரிஷாவின் ஜானு பாத்திரத்தை புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டு போட்டோ ஷாப் செய்துள்ளனர். அதில் மோனாலிசாவுக்கு 96 படத்தில் வரும் த்ரிஷா போல உரையும் ஷேர் ஸ்டைலும் செய்து அசத்தியுள்ளனர்.

இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இத்தாலியைச் சேர்ந்த லியொனார்டோ டா வின்சி 16ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் வரைந்ததாகும். 

Comments