Flipkart to invest over Rs 990 crore for logistics hub at west bengals haringhata || மேற்கு வங்கத்தில் பிளிப்கார்ட் ரூ.991 கோடி முதலீடு

Flipkart to invest over Rs 990 crore for logistics hub at west bengals haringhata ||  மேற்கு வங்கத்தில் பிளிப்கார்ட் ரூ.991 கோடி முதலீடு


2020ஆம் ஆண்டுக்குள் இதனை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 63.49 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளது.


மேற்கு வங்கத்தில் பிளிப்கார்ட் ரூ.991 கோடி முதலீடு


மேற்குவங்க மாநிலத்தில் ரூ.991 கோடி செலவில் தனது இரண்டாவது சரக்கு பரிமாற்ற மையத்தை அமைக்க இருப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட். இந்நிறுவனத்தின் சரக்குக் கிடங்கு ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது. புதிதாக 100 ஏக்கர் பரப்பில் பெங்களூரில் பெரிய சரக்கு பறிமாற்ற மையம் அமைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. 

இந்நிலையில், தனது இரண்டாவது பெரிய சரக்கு பறிமாற்ற மையத்தை மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிலிருத்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஹரிங்கதாவில் அமைக்க அந்நிறுவனம் முடிவுசெய்திருக்கிறது. 

இதுவும் 100 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இதனை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 63.49 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் 18,000 முதல் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


Comments