Four Nokia Smartphones Get A Price Cut Of Up To Rs 13000

நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களுக்கு 1,500 ரூபாய் வரையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


four nokia smartphones get a price cut of up to rs 13000
நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களுக்கு 1,500 ரூபாய் வரையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு நவம்பர் மாதம் நோக்கியா நிறுவனம் தனதுநோக்கியா 5 மாடலையும், அக்டோபர் மாதம் நோக்கியா 8 மாடலையும் அறிமுகப்படுத்தியது.துவக்கத்தில், நோக்கியா 5 மாடலின் விலை 13,499 ரூபாய் என்றும் நோக்கியா 8 மாடலின் விலை 36,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் மாடலை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது இதன் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஹெச்.எம்.டி நிறுவனம் நோக்கியா மொபைல்களுக்கு 1,500 ரூபாய் வரையில் சிறப்பு தள்ளுபடி விலை குறைப்பு ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாயிலிருந்து 10,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனின் விலை 1,500 ரூபாய் குறைக்கப்பட்டு, 12,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ் -இல் .உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்: 
பிராசசர்: MediaTek Helio P60 processor 
சிம்: டூயல் சிம் கார்டுகள் 
டிஸ்ப்ளே அளவு: 5.86 இன்ச் 
ரேம்: 3 ஜிபி 
இன்பீல்ட் மெமரி: 32GB 
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 400 ஜிபி 
கேமரா: டூயல் கேமரா 
முன்புற கேமரா: 5மெகா பிக்சல் 
பின்புற கேமரா: 13மெகா பிக்சல் 
பேட்டரி சக்தி: 3,600 mAh 

நோக்கியா 3.1 -இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்: 
பிராசசர்: ஆக்டோ கோர் 
ஆண்ட்ராய்டு வெர்ஷன்: 8.0 ஒரியோ 
சிம்: டூயல் சிம் கார்டுகள் 
டிஸ்ப்ளே அளவு: 5.2 இன்ச் 
ரேம்: 3 ஜிபி 
இன்பீல்ட் மெமரி: 32GB 
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 400 ஜிபி 
கேமரா: டூயல் கேமரா 
முன்புற கேமரா: 8மெகா பிக்சல் 
பின்புற கேமரா: 13மெகா பிக்சல் 
பேட்டரி சக்தி: 2,990 mAh



Comments