Google Maps Motorbike Mode Now In Kenya, First For Afric

முதல் முறையாக ஆப்பிரிக்காவில் நுழைந்த மோட்டார் பைக்



இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இந்த வசதி ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.


google maps motorbike mode now in kenya, first for africa

Highlights

  • இந்த வசதியை கென்யாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
  • ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக இந்த வசதியை கென்யா பெறுவது முக்கியமானது.
ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கூகுள் மேப்தனது மோட்டார் பைக் சேவையைத் தொடங்கியுள்ளது. 

கூகுள் மேப்பில் பைக்கில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சேர்க்கப்பட்ட அம்சம் மோட்டார்பைக். இதன் உதவியுடன் குரல் வழியில் செல்ல விரும்பும் இடத்திற்கான வழிகாட்டுதலை பைக் ஓட்டுபவர் கேட்டுக்கொண்டே அந்த வழியே செல்ல முடியும். 

இந்த வசதியை கென்யாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக இந்த வசதியை கென்யா பெறுவது முக்கியமானது. 

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இந்த வசதி ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

Comments