Google To Charge Up To $40 To Run Android Os

Android OS: மொபைல் பயனாளர்களுக்கு மோசமான செய்தி- இனி ஆண்ட்ராய்ட் ஓஎஸ் பயன்படுத்த 40 டாலர் கட்டணம்


ஆண்ட்ராய்ட் மொபைல் பயனாளர்களுக்கு மிக மோசமான செய்தியாக, இனி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் மொபைல் வாங்குவோருக்கு, ஆண்ட்ராய்டு இயங்கு தளம் (Android OS) பயன்படுத்து 40 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.


google to charge up to $40 to run android os
ஆண்ட்ராய்ட் மொபைல்பயனாளர்களுக்கு மிக மோசமான செய்தியாக, இனி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் மொபைல் வாங்குவோருக்கு, ஆண்ட்ராய்டு இயங்கு தளம் (Android OS) பயன்படுத்து 40 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாடிக்கையாளர்களிடம் அதற்கான இயங்கு தளம் கட்டணத்தையும் சேர்த்து வசூல் செய்து போனை விற்பனை செய்து வருகின்றது. 

ஏன் திடீர் கட்டணம்: 
சில மாதங்களுக்கு முன் ஐரோப்பிய ஆணையம், ஸ்மார்ட் போன் சந்தையில் ஆண்ட்ராய்டு தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டி 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது. 

அதனால் ஐரோப்பிய ஒன்றியம் பகுதியில் வாங்கப்படும் ஸ்மார்ட் போன், டேபிளட் உள்ளிட்ட உபகரணங்களில் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் பயன்படுத்தினால் அதற்கு 40 டாலர் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. 

இந்த கட்டணம் அக்டோபர் 29ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்த கட்டண விபரம் ஒவ்வொரு நாடுகளையும் பொருத்து இருக்கும். அதிக பட்ச கட்டணமாக 40 டாலரும், குறைந்தபட்ச கட்டணமாக 2.50 டாலர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கட்டணம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. ஒருவேளை கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. 


Comments