வரும் 2020க்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் 4ஜி சேவை; முகேஷ் அம்பானி!
புதுடெல்லி: ஜியோ ஜிகா பைபர் மூலம் இந்தியர்கள் அனைவரும் 4ஜி சேவை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ’இந்திய மொபைல் நிறுவனங்களின் மாநாடு’ நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பங்கேற்று பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கடந்த 2016ல் மலிவான விலையில் மொபைல் டேட்டா, இலவச குரல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சேவையை ஜியோ வழங்கியது. இது தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியாக கருதப்படுகிறது.
இதன்மூலம் மொபைல் இணையப் பயன்பாட்டில் மிக அதிகப் பயன்பாடு கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஜியோ ஜிகா ஃபைபர் எனும் பிராட்பேண்ட் சேவையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறோம்.
எங்களது ஜியோ ஜிகா ஃபைபர் மூலம் வீட்டுக்கு வெளியில் 4ஜி, 5ஜி சேவைகளைப் பெறலாம். வீட்டிற்குள் வைஃபை வசதியைப் பெறலாம். ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் மூலம் அதிவேக இணைய சேவை பெறும் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மொபைல் இணைய சேவையில் உலகில் முதலிடத்தில் இந்தியாவை கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியா135வது இடத்தில் உள்ளது என்று கூறினார்.
India will be 4G nation by 2020 says Mukesh Ambani.

Comments
Post a Comment