Kamal Launches Woman Safety App Rowthiram

பெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்


பெண்கள் பாதுகாப்புக்காக தனியார் கல்லூரி தயாரித்துள்ள ‘ரௌத்திரம்’ செயலியை கமல் வெளியிட்டார்.


kamal launches woman safety app rowthiram
பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலியை வெளியிட்டார் கமல்
தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. 

அந்த விழாவில், ‘ரவுத்திரம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்பு செயலியை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

மேலும், கமல் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், விஜய் டீவி கோபிநாத், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.


Comments