Lenovo S5 Pro Launched With Dual Rear And Front Cameras, Ai-Powered Portrait Mod

கலக்கல் கேமராவுடன் லெனோவோ எஸ்5 ப்ரோ அறிமுகம்

லெனோவா நிறுவனத்தின புதிய ஸ்மார்ட்போனாக லொனோவோ எஸ்5 ப்ரோ அறிமுகமாகியுள்ளது.

lenovo s5 pro launched with dual rear and front cameras, ai-powered portrait mode
லெனோவா நிறுவனத்தின புதிய ஸ்மார்ட்போனாக லொனோவோ எஸ்5 ப்ரோ அறிமுகமாகியுள்ளது. 

சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த மொபைலின் சிறப்பு அம்சம் முன்னும் பின்னும் உள்ள டூயல் கேமரா. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் செல்ஃபி கேமரா போர்ட்ரைட் படங்கள் எடுக்க சிறந்ததாக இருக்கும். 

பின்புற கேமரா 20MP+12MP திறன் கொண்ட டூயல் கேமரா. முன்புற கேமரா 20MP+8MP திறன் கொண்டது. தவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசெசர், பேஸ் அன்லாக், ஆகிய அசத்தலான அம்சங்களும் உள்ளன. 

கருப்பு, நீலம் மற்றும் கோல்டு கலர்களில் கிடைக்கும் இந்த மொபைல் 6GB RAM கொண்டிருக்கும். இன்டர்நெல் மெமரி மட்டும் 64GB அல்லது 128GB என இரண்டு வேரியண்ட்டாக கிடைக்கும்.

இதன் பேட்டரி 3500 mAh மட்டுமே. இதன் மற்ற அம்சங்களுடன் ஒப்பிடும் போதும் இதேபோன்ற மொபைல்கள் இன்னும் நீடிக்கும் தன்மை கொண்ட பேட்டரியுடன் இருக்கின்றன. 

இதன் இந்திய மதிப்பில் சுமார் 13,000 ரூபாயாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 



Comments