Mi Mix 3 அறிமுகம்: சியோமியின் செல்ஃபி கேமரா புரட்சி

Mi Mix 3 அறிமுகம்: சியோமியின் செல்ஃபி கேமரா புரட்சி


செல்ஃபி கேமராவும் ரியர் கேமராவும் டூயல் கேமராக்களாக இருப்பதால் மொத்தம் 4 கேமராக்கள் இந்த மொபைல்லில் இருப்பது மேலும் முக்கியமான அம்சம்.


xiaomi mi mix 3 with front camera slider, 4 cameras, up to 10gb ram launched

சியோமி நிறுவனத்தின் புதிய Mi Mix 3 மொபைலில் செல்ஃபி கேமராவில் புதுமையைப் புகுத்தி அசத்தியுள்ளது. 

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Mi Mix 3 இன்று சீனாவின் பீஜிங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைலில் அனைவரையும் கவரும் அம்சமாகத் திகழ்வது இதிலுள்ள 10GB RAM மற்றும் செல்ஃபீ கேரமா. 

பெசல்லெஸ் டிஸ்பிளேக்கு அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் மாறிவிட்டன. மொபைலின் முன்பகுதியில் கிட்டத்தட்ட முழுவதுமே டிஸ்பிளே உள்ளது. ஆனால், செல்ஃபி கேமரா மட்டும் திரையில் சிறிய இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. இதை எங்கே மாற்றி வைத்துவிட்டு முன்பக்கத்தை முழுதும் டிஸ்பிளேக்கு மட்டுமாக மாற்றலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் யோசித்து வருகிறார்கள். 

இந்தச் சூழலில்தான் சியோமி இதற்கு ஒரு தீர்வை தனது Mi Mix 3 மொபைலில் தந்திருக்கிறது. செல்ஃபி கேமராவை பயன்படுத்த ஸ்கிரீனை ஸ்லைட் செய்தால் ஸ்கிரீனுக்கு அடியில் உள்ள கேமரா வெளித்தெரியும். அதை பயன்படுத்தி செல்ஃபி எடுக்கலாம். இதன் லாஜிக் பழைய ஸ்லைடிங் மாடல் மொபைல்களைப் போலவே உள்ளதுதான்.

செல்ஃபி கேமராவும் ரியர் கேமராவும் டூயல் கேமராக்களாக இருப்பதால் மொத்தம் 4 கேமராக்கள் இந்த மொபைல்லில் இருப்பது மேலும் முக்கியமான அம்சம். எனவே, இந்த மொபைல் கேஜெட் பிரியர்கள் பெரிதும் கவர்ந்துள்ளது. தவிர ஸ்னாப்டிராகன் 845 பிராசெசர் இருப்பதால் தங்குதடையற்ற இயக்கத்துக்கு உத்திரவாதம் உள்ளது. 

இந்த மொபைல் மற்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல் மொபைல்களுடன் போட்டி போடும் சியோமியின் மொபைலாகக் கருதப்படுகிறது. சீனாவில் இதன் விலை 3,299 யுவான் ஆக உள்ளது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது இந்திய மதிப்பில் சுமார் 35,000 ரூபாய்க்கு விற்கப்படலாம். 

Comments