Nokia 8110 4g banana phone india launch price specs features || Nokia 8110 4G: வாழைப் பழ மொபைல்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

Nokia 8110 4g banana phone india launch price specs features   ||  Nokia 8110 4G: வாழைப் பழ மொபைல்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..



வாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்தது. 


nokia 8110 4g banana phone india launch price specs features

நோக்கியா மொபைல்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 1 (Nokia 1), நோக்கியா 6 (Nokia 6), நோக்கியா 7 பிளஸ் (Nokia 7 Plus), நோக்கியா 8 சிரோக்கோ (Nokia 8 Sirocco) மற்றும் நோக்கியா 8110 4G (Nokia 8810 4G) ஆகிய 5 புதிய மொபைல்கள் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டது. 

இதில் வாழைப் பழ வடிவிலான நோக்கியா 8110 மொபைல் அனைவரையும் கவர்ந்தது. இந்த மொபைல் 'தி மேட்ரிக்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. அதில் வரும் நியோ என்ற பாத்திரம் வாழைப் பழ வடிவிலான நோக்கியா மொபைல் பயன்படுத்துவது பலரையும் ஈர்த்தது. 

ஏற்கெனவே நோக்கியா 8110 மொபைல் 1996 ஆம் ஆண்டு அறிமுகமானது. இப்போது புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ள நோக்கியா 8110 மொபைல் 4G வசதி கொண்டது. 'Banana phone' என்றும் குறிப்பிடப்படும் இந்த மொபைல் வாழைப்பழம் போல சற்று வளைந்திருக்கும்.






இதில், பேசிக் போன் போன்ற கீபேட் மூடப்பட்டிருக்கும். அதை திறந்து மூடுவதன் மூலம் அழைப்புகளை ஏற்கவோ துண்டிக்கவோ செய்யலாம். இத்துடன் கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப், பேஸ்புக், ட்விட்டர், ஆகிய அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்யும் வசதியும் உண்டு. ஜிமெயில், அவுட்லோக் போன்ற ஈமெயில் அப்ளிகேஷன்களும் உள்ளன. 

குவால்காம் 205 மொபைல் சென்சார், ஸ்னேக் கேம், நோக்கியாவின் கை (Kai) இயங்குதளம் ஆகியவை உள்ளன. கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் விற்கப்படும், இதன் விலை சுமார் ரூ.5,499 என்று நிரண்யம் செய்யப்பட்டுள்ளது.




Comments