Over 50 Crore Mobiles Numbers May Face Kyc Proof Issue

KYC விவகாரம்: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு


உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


over 50 crore mobiles numbers may face kyc proof issue
ஆதாா் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட சுமாா் 50 கோடி செல்போன்இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கே ஒய் சி (KYC – Know Your Customer) எனப்படும் தனிநபா் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு தான் செல்போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்குகிறது. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஆதாா் எண்களை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஏா்டெல், பி.எஸ்.என்.எல். என அனைத்து நிறுவனங்களும் ஆதாா் எண்ணை பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. 

ஜியோ நிறுவனம் மட்டும் சுமாா் 25 கோடி வாக்காளா்களுக்கு ஆதாா் எண் அடிப்படையில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி எந்தவொரு சூழலிலும் தனியாா் நிறுவனங்கள் ஆதாா் எண்ணை பெற்றுக் கொண்டு பயனாளா்களுக்கு சேவை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஆதாா் தவிா்த்து பிற அடையாள அட்டையை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி சுமாா் 50 கோடி போ் ஆதாா் எண் மூலம் செல்போன் எண்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனா். இந்திய அளவில் 50 விழுக்காடு மக்கள் இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். இதற்கான உத்தரவை தொலைத்தொடா்புத்துறை விரைவில் பிறப்பிக்கும் என்று எதிா்பா்ாக்கப்படுகிறது.


Comments