Want To Buy The Oneplus 6t? Here Are Its Prices

ஒன்பிளஸ் 6T மொபைலின் ரகசியம் வெளியானது!


அமேசான் மூலம் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

want to buy the oneplus 6t? here are its prices

Highlights

6GB RAM + 128GB ROM வேரியண்ட் ரூ.37,999க்கும் 8GB RAM + 128GB ROM வேரியண்ட் ரூ.40,999க்கும் 8GB RAM + 256GB ROM வேரியண்ட் ரூ.44,999க்கும் விற்பனை செய்யப்படும்
ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் விலை சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 6 மொபைல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6T மொபைல் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 

கேஜெட் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மொபைல் டச் ஸ்கிரீனிலேயே கைரேகை சென்சார் வசதி, பேஸ் ஐடி வசதி, ஸ்னாப்டிராகன் 845 பிராசெசர் என பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 

அமேசான் மூலம் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த மொபைலின் விலை விபரம் கசிந்துள்ளது.


இசான் அகர்வால் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "6GB RAM + 128GB ROM வேரியண்ட் ரூ.37,999க்கும் 8GB RAM + 128GB ROM வேரியண்ட் ரூ.40,999க்கும் 8GB RAM + 256GB ROM வேரியண்ட் ரூ.44,999க்கும் விற்பனை செய்யப்படும்" எனக் கூறிப்பிட்டுள்ளார். 


Comments