whatsapp fixes bug that let hackers take over app when answering a video call || வீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வாட்ஸ்-அப் அதிர்ச்சி!

whatsapp fixes bug that let hackers take over app when answering a video call || வீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வாட்ஸ்-அப் அதிர்ச்சி!


லண்டன்: வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் செய்யும் போது, அந்த அப்ளிகேஷனை ஹேக்கர்கள் தன் வசப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

whatsapp fixes bug that let hackers take over app when answering a video call


சமூக வலைத்தள பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-அப். இதனை பேஸ்புக் நிறுவனம்நிர்வகித்து வருகிறது. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் ஓ.எஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தொடக்கத்தில் குறுந்தகவல் அனுப்ப மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வீடியோ கால் பேசும் அளவிற்கு மேம்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசும் போது, அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்கள் நிகழ்வதாக ZDnet and the register இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. 

இது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்-அப் நிறுவனம், தொழில்நுட்ப குறைபாட்டை சீர் செய்ய தீவிர முயற்சியில் இறங்கியது. 

இதையடுத்து சமீபத்தில் குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.





Comments