Whatsapp Reportedly Tweaks How 'Delete For Everyone’ Feature Works || WhatsApp: வாட்ஸ்அப் டெலிட் வசதியில் நூதன மாற்றம்
WhatsApp: வாட்ஸ்அப் டெலிட் வசதியில் நூதன மாற்றம்
இந்த புதிய விதிமுறை மூலம் பழைய மெசேஜ் டெலிட் செய்யப்படுவதைக் குறைக்கலாம் என எண்ணுவதாகக் கூறப்படுகிறது.

Highlights
- ‘Delete For Everyone’ மூலம் அனுப்பிய மெசேஜை ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் டெலிட் செய்யலாம்.
- ஆனால், பெறுநர் குறைந்தபட்சம் 13 மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்கு மொபைலை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதியில் நூதனமான மாற்றம் ஒன்றை அமல்படுத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் முதல் முதலில் ‘Delete For Everyone’ என்ற வசதியை அறிமுகம் செய்தபோது, 7 நிமிடங்களுக்குள் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யலாம் என இருந்தது. பின் ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் டெலிட் செய்துகொள்ளலாம் என மாற்றியது.
தற்போதைய நடைமுறை:
வாட்ஸ்அப் நிறுவனம் முதல் முதலில் ‘Delete For Everyone’ என்ற வசதியை அறிமுகம் செய்தபோது, 7 நிமிடங்களுக்குள் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யலாம் என இருந்தது. பின் ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் டெலிட் செய்துகொள்ளலாம் என மாற்றியது.
தற்போதைய நடைமுறை:
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் அனுப்பியவர் பெறுநரிடமும் தனது மெசேஜை டெலிட் செய்யுமாறு ‘Delete For Everyone’ என்பதை கிளிக் செய்கிறார். இதன்படி, அந்த குறிப்பிட்ட மெசேஜ் பெறுநரின் வாட்ஸ்அப்பிலும் டெலிட் செய்யப்படும். பெறுநரும் தனது மொபைலை இன்டர்நெட்டுடன் இயக்க நிலையில் வைத்திருந்தால், அனுப்புநரின் வாட்ஸ்அப்பில் டெலிட் ஆகும்போதே பெறுநருக்கும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும்.
புதிய நேரக் கட்டுப்பாடு:
இத்துடன் Recipient limit என்ற புதிய விதியையும் புகுத்த இருப்பதாகத் தெரிகிறது. அனுப்பியவர் ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் ஒரு குறிப்பிட்ட மெசேஜை டெலிட் செய்யுமாறு ‘Delete For Everyone’ என்பதை கிளிக் செய்து, பெறுநரிடமும் அந்த மெசேஜ் உடனே டெலிட் செய்யப்முடியாதபடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் அனுப்புநர் (‘Delete For Everyone’ மூலம்) டெலிட் செய்ய முடிவு செய்த 13 மணிநேரம் 16 நிமிடங்கள் 8 விநாடிகளுக்குள் பெறுநர் தனது மொபைலை இயக்க வேண்டும். அப்போதுதான் அனுப்புநர் விரும்பியபடி குறிப்பிட்ட மெசேஜ் பெறுநரின் வாட்ஸ்அப்பிலும் டெலிட் செய்யப்படும். இதுதான் புதிய விதி.
இந்த புதிய விதிமுறையை வாட்ஸ்அப் விரைவில் அமலுக்குக் கொண்டுவரும் எனத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு மூலம் பழைய மெசேஜ் டெலிட் செய்யப்படுவதைக் குறைக்கலாம் என எண்ணுவதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment