Xperia Xz1, Xperia Xz Premium, And Other Sony Phones Get Price Cuts In India

Diwali Sale: சோனி எக்ஸ்பீரியா மொபைல்கள் விலைக் குறைப்பு


எக்ஸ்பீரியா R1, எக்ஸ்பீரியா R1 பிளஸ், எக்ஸ்பீரியா XA1, எக்ஸ்பீரியா XA1 பிளஸ், எக்ஸ்பீரியா XZ1 மற்றும் எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஆகிய மொபைல்களின் விலை சரிந்துள்ளது.


xperia xz1, xperia xz premium, and other sony phones get price cuts in india
சோனி நிறுவனத்தின் பல ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் வெகுவாகக் குறைந்துள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு சோனி நிறுவனம் தனது மொபைல்போன்களுக்கு இந்தியாவில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் ஆறு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்பீரியா R1, எக்ஸ்பீரியா R1 பிளஸ், எக்ஸ்பீரியா XA1, எக்ஸ்பீரியா XA1 பிளஸ், எக்ஸ்பீரியா XZ1 மற்றும் எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஆகிய மொபைல்களின் விலை சரிந்துள்ளது. 

ரூ.9,490க்கு விற்கப்பட்ட எக்ஸ்பீரியா R1 இப்போது ரூ. 7,990. எக்ஸ்பீரியா R1 பிளஸ் ரூ. 12,990க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.10,990. எக்ஸ்பீரியா XA1 இப்போது ரூ.12,990க்குக் கிடைக்கும். முன்பு இதன் விலை ரூ.17,990. எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ரூ.19,990 என்ற விலையிலிருந்து ரூ.14,990 என்ற விலைக்கு மாறியுள்ளது.
எக்ஸ்பீரியா XZ1 மற்றும் எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஆகியவை ரூ.10,000 விலை குறைந்துள்ளன. எக்ஸ்பீரியா XZ1 ரூ. 34,990க்கும் எக்ஸ்பீரியா XZ ப்ரீமியம் ரூ. 39,990க்கும் கிடைக்கும். 

Comments