யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக, உலகம் முழுவதும் முடங்கி இருந்த யூடியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.

யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி இருந்த யூடியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கூகுளின் பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம், சர்வர் பிரச்சனை காரணமாக இன்று காலை முடங்கியது. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இதுகுறித்து யூடியூப் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ”நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.எவருக்கேனும் பிரச்சனை இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்தவும்” என்று கூறப்பட்டுள்ளது.
கூகுளின் பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம், சர்வர் பிரச்சனை காரணமாக இன்று காலை முடங்கியது. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Comments
Post a Comment